Home » » எங்கே போனது 14840 தமிழர்களின் காணிகள்

வடக்கில் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மத்திய அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு வட மாகாண சபை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்  சபையில் தெரிவித்தார்.

கொழும்பில் வாழும் மக்களுக்கு கொழும்பிலேயே வீடுகளை வழங்குவோம் இங்கிருந்து வெளியேற்றமாட்டோமென்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம் பெற்ற உள்ளூராட்சி மாகாண சபைகள் மற்றும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இதனை தெரிவித்தார்.
 
அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
நல்லிணக்க ஆணைக்குழு நிபுணர்குழு எமது அமைச்சிற்கு 13 பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல பரிந்துரைகளை நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம்.
 
விசேடமாக வடக்கில் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கே முன்னுரிமைகளை வழங்கி வருகின்றோம்.
 
வடக்கில் மொத்தமாக 148408 காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. இவற்றில் 22408 காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம்.
 
தீர்க்கப்பட வேண்டிய காணிப் பிரச்சினைகளின் தொகை 125950 ஆகும். இவற்றுக்கும் தீர்வுகள் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
 
ஆனால் அரசியல்வாதிகள் வடக்கு காணிகள் தொடர்பில் மேற்கொண்டுள்ள நீதிமன்ற நடவடிக்கைகளால் சில பிரச்சினைகளை தீர்ப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
 
இராணுவத்தால் கைப்பற்றியிருந்த 375.5 ஏக்கர் காணி மீளவும் அக்காணிகளின் உரிமையுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
தற்போது இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் 375.5 ஏக்கராகும். இதனால் காணிகள் இழந்தவர்களுக்கு மாற்றுக் காணிகளும் நஷ்ட ஈடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
 
வடக்கில் காணிப் பிரச்சினைகளில் நூற்றுக்கு 75 வீதம் தீர்க்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வட மாகாண சபை எமக்கு தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.
 
காணிகள் இல்லாத விவசாயிகள் அனைவரும் காணிகள் வழங்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
 
அத்தோடு கொழும்பில் சேரிகளில் வாழும் 65000 மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்காக 200 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் வாழும் மக்களை எக்காரணம் கொண்டும் கொழும்பிலிருந்து வெளியேற்ற மாட்டோம் என்றார்.

0 comments to "எங்கே போனது 14840 தமிழர்களின் காணிகள் "

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer