Home » » சிங்கப்பூர் கலவரம்: 24 இந்தியர்கள் கைது

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ள, 24 இந்தியர்களை, ஏழு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அந்நாட்டு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள, "லிட்டில் இந்தியா' என்ற பகுதியில், கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த சாலை விபத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தை அடுத்து, தெற்காசியாவைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களில், 24 பேர் கைது செய்யப்பட்டு, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும், ஏழு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, அனைவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். "அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை, கடுங்காவல் தண்டனை விதிக்கப்படலாம்' என, சிங்கப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும், 22 முதல் 40 வயது உடையவர்கள், அனைவரும் பிழைப்பு தேடி சிங்கப்பூர் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, கலவரம் ஏற்பட்ட, லிட்டில் இந்தியா பகுதியில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

0 comments to "சிங்கப்பூர் கலவரம்: 24 இந்தியர்கள் கைது"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer