Home » » சல்மான்கானுடன் டூயட் பாடும் என்னை, சூர்யாவுடன் குத்துப்பாட்டுக்கு ஆட அழைப்பதா? - ஷாக் கொடுத்த சனாகான்

சிலம்பாட்டம் சனாகான், சில்க் கதையில் உருவான நடிகையின் டைரி படத்தில் நடித்த பிறகு, இந்திக்கு சென்று விட்டார். பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டபோது சல்மான்கானுடன் ஏற்பட்ட பழக்கத்தினால், தான் நடிக்கும் ஜெய்ஹோ படத்தில் சனாகானுக்கு நாயகி வாய்ப்பு கொடுத்தார் சல்மான்கான்.

அதனால், இந்தியில் கிடைத்த பெரிய வாய்ப்பினால் அடுத்தடுத்து தமிழில் இருந்து தேடிச்சென்ற சில படவாய்ப்புகளை திருப்பி அனுப்பினார் சனாகான். இப்போது அப்படம் திரைக்கு வரத்தயாராகி விட்டதால், படத்தின் வெற்றி தோல்வியைப்பொறுத்து இந்தி சினிமாவில் தனது எதிர்காலம் இருக்கும் என்று திக் திக் மனநிலையுடன் காத்திருக்கிறார் சனாகான்.

இந்த நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யாவுடன் குத்தாட்டம் ஆட சனாகானுக்கு அழைப்பு விடுத்தார்களாம். ஆனால், சல்மான்கான் போன்ற பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்ட நான் சூர்யா போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக வேண்டுமானால் நடிக்கலாம். குத்தாட்டம் ஆடினால் எனது கதாநாயகி இமேஜ் பாதிக்கப்படும் என்று தடாலடியாக மறுத்து விட்டாராம்.

சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் அஞ்சலியே ஒரு குத்தாட்டம் ஆடியதால், எந்த தயக்கமும் இல்லாமல் சனாகானிடமும் இதுபற்றி கேட்டவர்கள் அவரது இந்த முடிவினால் ஷாக் ஆகி விட்டார்களாம்.

0 comments to "சல்மான்கானுடன் டூயட் பாடும் என்னை, சூர்யாவுடன் குத்துப்பாட்டுக்கு ஆட அழைப்பதா? - ஷாக் கொடுத்த சனாகான்"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer