Home » , » நடிகை காம்னா இரகசிய திருமணம்

இந்தியாவின் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் பேத்தி காம்னா தமிழில் இதய திருடன் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன்பிறகு மச்சக்காரன், காசேதான் கடவுளடா, ராஜாதிராஜா படங்களில் நடித்தார். தெலுங்கில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு தற்போது வாய்ப்புகள் எதுவும் இல்லா நிலையில் இருக்கிறார். 

இப்போது காம்னா பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் சூரஜ் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்ததாகவும், காதலுக்கு இரண்டு குடும்பத்தாரும் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து திருணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. 

நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரகசியமாக நடந்த இந்த திருமணத்தில் காம்னாவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து சினிமாவில் நடிக்க விரும்புவதால் தன் திருமணத்தை ரகசியமாக நடத்தியதாக கூறப்படுகிறது.


இந்த செய்தி வெளியாகியவுடன் இதனை காம்னா மறுக்கவும் இல்லை. ஒப்புக் கொள்ளவும் இல்லை.
அப்படியானால், இனி இன்னொரு அழகிய நடிகையை தமிழ் சினிமா இழந்து விட்டதா?

0 comments to "நடிகை காம்னா இரகசிய திருமணம்"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer