Home » » கன்னட படத்தில் நடிக்கிறார் த்ரிஷா: வாய்ப்பு குறைவதால் இறங்கி வருகிறார்

நடிகை த்ரிஷா கடந்த பத்து வருடங்களாக தமிழ், தெலுங்கு சினிமாவில் தனியாட்சி நடத்தினார். அவர் கால்ஷீட்டுக்காக இரண்டு மொழி படங்களும் காத்துக்கிடந்தன. ஹீரோக்களும் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தார்கள். தமிழில் முக்கால் கோடியும், தெலுங்கில் முழு கோடியும் சம்பளம் வாங்கியவர் கன்னட மற்றும் மலையாளப் பட வாய்ப்புகள் வந்தபோது நடிக்க மறுத்தார். காரணம் அந்த இரண்டு மொழிகளிலும் சம்பளம் குறைவு. 

ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. த்ரிஷாவுக்கு 30 பிளஸ் வயதாகிவிட்டது. புதுபுது இளம் நடிகைகள் வந்து விட்டார்கள். நயன்தாரா, காஜல் அகர்வால், அனுஷ்கா, ஸ்ருதி ஆகியோர் அசைக்க முடியாத சக்திகளாக நின்று கொண்டிருக்கிறார்கள். அதனால் த்ரிஷா தனது பழைய கட்டுப்பாடுகளை தளர்த்தி கன்னட மலையாளப் படங்களின் கதை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

முதலாவதாக கன்னடப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். 2011ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்து ஹிட்டான தூக்குடு தற்போது கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. இதில் தெலுங்கில் சமந்தா நடித்த கேரக்டரில் த்ரிஷா நடிக்கிறார். மகேஷ்பாபு நடித்த கேரக்டரில் புனித் ராஜ்குமார் நடிக்கிறார்.

"முதன் முறையாக கன்னடப் படத்தில் நடிக்க இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது குறுகிய காலத்தில் எடுத்த முடிவு. இனி இதுபோன்று அடிக்கடி நடக்கலாம்" என்று தனது டுவிட்டரில் எழுதியிருக்கிறார் த்ரிஷா.

0 comments to "கன்னட படத்தில் நடிக்கிறார் த்ரிஷா: வாய்ப்பு குறைவதால் இறங்கி வருகிறார்"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer