பொலிஸாருக்கு மாதாந்தம் ஊதியம் வழங்கப்படுகின்றது. அவர்கள் அதற்கு மேலாக பொதுமக்களிடம் இலஞ்சம் வாங்கினால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட புதிய பிரதிப்பொலிஸ் மா அதிபர் றொகான் டயஸ் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு செய்தி தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸார் சமூக சேவைக்காக கடமைக்கு நியமிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது.
எனவே பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு உதவிக்கும் பொலிஸார் இலஞ்சம் வாங்குவதோ அல்லது பொதுமக்கள் இலஞ்சம் கொடுப்பதோ சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு நடைபெற்றதை அறிந்தால் யாராக இருந்தாலும் என்னிடம் தெரியப்படுத்துங்கள் அதற்கான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



0 comments to "இலஞ்சம் வாங்கினால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட புதிய பிரதிப்பொலிஸ்மாஅதிபர்"