Home » » பூனைகளுக்கு உணவளிப்பதற்காக கொள்ளையடித்த நபர்

தான் வளர்த்து வரும் 120 பூனைகளுக்கு உணவளிப்பதற்காக சுமர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல்  பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த நபர் ஒருவரை ஜப்பான் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

ஜப்பானை  சேர்ந்த  மமோரு டெமிஸ் என்ற இந் நபர்  கிட்டத்தட்ட 120 பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்துள்ளார். பூனைகளை தனது நண்பர்களைப் போல வளர்த்த டெமிஸ் அவற்றிற்கு உணவளிப்பதற்காக  இதுவரை 32 இடங்களில் கொள்ளையடித்துள்ளார்.

இதுவரை அவர் கொள்ளையிட்ட பொருட்களின் மதிப்பு 185 ஆயிரம் அமெரிக்க டொலர் ஆகும்.  தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட டெமிஸ் தனது பூனையின் கன்னங்களோடு தனது கன்னத்தை உரசும் போது தான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாக கூறியுள்ளதோடு.திருடிய பணத்தைக் கொண்டு தனது பூனைகளுக்கு தினமும் புதிய மீன்கள் , உணவுகளை  வாங்கிக் கொடுத்துள்ளதாக  கூறியுள்ளார்.

0 comments to "பூனைகளுக்கு உணவளிப்பதற்காக கொள்ளையடித்த நபர்"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer