Home » » இலங்கை கடற்படையின் அட்டகாசம் இந்திய மீனவர்கள் கைது

யாழ். அனலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில்  மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிந்த இந்திய மீனவர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை இவர்களிடமிருந்து 8 ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

காங்கேசன்துறை கரையோர காவல் படையினரும் கடற்படையினரும் இணைந்து  மேற்படி மீனவர்கள் 30 பேரையும் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்துள்ளனர். 

மேலும், எட்டு ரோலர்  படகுகளில் வந்த இந்தியாவின் ஜனதாப் பட்டிணத்தையும் கோட்டைப் பட்டிணத்தையும் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களாவர். 

இவ்வாறு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 30 பேரும்  காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை பரிசோதகர் பா. ரமேஷ்கண்ணா தெரிவித்தார்

0 comments to "இலங்கை கடற்படையின் அட்டகாசம் இந்திய மீனவர்கள் கைது "

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer