Home » » வியட்நாமில் எலி பொரியல் திடீர் விலை ஏற்றம்


வியட்நாமின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் ஹனோயில் அண்மைக்காலமாக எலிகளை விரும்பி உண்ணுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் வேகவைத்த எலிகளை உண்ணுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.






 
வியட்நாமின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள ஆற்றங்கரையோரமாக வாழ்ந்த மக்கள் ஆரம்ப காலங்களில் எலிகளை உணவாக உட்கொண்டு வந்தனர்.
 
அதன் சுவையை அறிந்த ஏனைய பகுதி மக்களும் எலிகளை உணவாகக் உட்கொள்ள ஆரம்பித்தனர்.
 
தற்போது வியட்நாம் முழுவதும் எலிகள் சிறந்த உணவாக உண்ணப்படுவதுடன் ஏனைய நாடுகளை விட சுவை மிகுந்ததாக தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வியட்நாமில் ஒரு கிலோ கிராம் எலி இறைச்சி 4 அல்லது 5 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments to "வியட்நாமில் எலி பொரியல் திடீர் விலை ஏற்றம் "

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer