Home » » மண்டேலாவின் நினைவுப் பிரார்த்தனை : தென்னாபிரிக்காவில் (நேரடி ஒளிபரப்பு)

மறைந்த நெல்சன் மண்டேலாவின் நினைவுப் பிரார்த்தனையில் கலந்துகொள்ளவதற்காக தென்னாபிரிக்காவின் சொவெட்டோவில் இருக்கும் எப்.என்.பி. விளையாட்டரங்கிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றுள்ளார்.



இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவிருக்கும்  நெல்சன் மண்டேலா நினைவுப் பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொள்ள எப்.என்.பி விளையாட்டரங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியுள்ளனர்.

குறித்த அரங்கில் பலர் நேற்றிரவிலிருந்தே மழையையும் பொருட்படுத்தாது அங்கு  முகாமிட்டுள்ளனர்.
 
நினைவுப் பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொள்ள சர்வதேசத் தலைவர்கள் பலர் அங்கு சென்றுள்ளனர். குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
 
பிரார்த்தனை நிகழ்வு ஜோஹனஸ்பேர்க்கில் இருக்கும் மூன்று விளையாட்டரங்குகளிலும் குழுமியிருக்கும் மக்களுக்குக் காண்பிப்பதற்காக பிரம்மாண்டமான தொலைக்காட்சித் திரைகளில் ஒளிபரப்பப்படவுள்ளது.
 
நெல்சன் மண்டேலாவின் உடலடங்கிய பேழை அரச மரியாதைக்காக பிரிட்டோரியாவில் வைக்கப்பட்டு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்குகள் நடைபெறும் வரை, பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.

0 comments to "மண்டேலாவின் நினைவுப் பிரார்த்தனை : தென்னாபிரிக்காவில் (நேரடி ஒளிபரப்பு)"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer