சிங்கப்பூர் கலவரத்திற்கு காரணமான, விபத்தில் இறந்த வாலிபர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது உடல், இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.
சிங்கப்பூரில் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தை சேர்ந்த குமாரவேலு, 33, என்பவர் சிங்கப்பூரில் நடந்த சாலை விபத்தில் பலியானார். இதனால், ஆத்திரமடைந்த தமிழர்கள் விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரை அடித்து உதைத்தனர். அதை, போலீசார் தடுக்க முயன்ற போது ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில், 10 போலீசார் உட்பட, 18 பேர் காயமடைந்தனர்.
இதனால், சிங்கப்பூரில் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது. வன்முறை தொடர்ந்ததால், 24 இந்தியர்கள் உள்பட, 27 பேர் கைது செய்யப்பட்டனர்.விபத்தில் இறந்த குமாரவேலுவின் உடல், அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்திற்கு கொண்டு வர, தமிழக அரசு மூலம் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் உடல் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இறந்த குமாரவேலுவின் தந்தை சக்திவேல், ஆறு ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். தாய் ராஜேஸ்வரி; தம்பி ரமேஷ், அரிமளம், அ.தி.மு.க., கிளை செயலாளராக உள்ளார்.


0 comments to "பலியான வாலிபர் உடல் இன்று கொண்டு வரப்படுகிறது"