Home » » த.தே.ம.மு நடாத்திய சா்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு

சா்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஒன்று கூடல் நிகழ்வு  நேற்று செவ்வாய்க்கிழமை  பி.ப 3.00 மணி தொடக்கம் 6.00 மணி வரை இடம்பெற்றுள்ளது.






இந்நிகழ்வில் காணாமல் போன மற்றும் சிறைச்சாலையில் வாடும் உறவுகளதும் விடுதலையையும் நலனையும் வேண்டி தீபமேற்றி பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன் அவா்களது தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் செல்வராசா கஜேந்திரன் வரவேற்புரையையும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பிரசார செயலாளா் எஸ்.இளங்கோ தலைமை  உரையினையும் ஆற்றியுள்ளனர்.

தொடா்ந்து  மனித உரிமை  செயற்பாட்டாளரும் தமிழ்த் தேசிய  செயற்பாட்டாளரும் பிரபல சடத்தரணியுமான  கந்தசாமி அவா்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றியுள்ளனர்.
 
 
மேலும் அருட்பணி ராஜ்குமார்  பத்மினி சிதம்பரநாதன் கிராமிய உழைப்பாளா் சங்கம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு மன்றத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளா் இன்பம் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளா்  சதீஸ் ஆகியோரும் உரையாற்றினர்.

0 comments to "த.தே.ம.மு நடாத்திய சா்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer