சினிமா பைனான்சியர் பைசூல், திட்டமிட்டு என்னை வேண்டுமானால் ஏமாற்றி இருக்கலாம். ஆனால், சட்டத்தை அதே போல அவர் ஏமாற்ற முடியாது, என, நடிகை ராதா தெரிவித்துள்ளார்.
"சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, மானஸ்தன் உள்ளிட்ட படங்களில், கதாநாயகியாக நடித்தவர், நடிகை ராதா. சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த அவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், "சினிமா பைனான்சியரும், வைர வியாபாரியுமான பைசூல், தன்னுடன் ஆறாண்டு காலம் குடும்பம் நடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் பறித்து, படுக்கையறை காட்சிகளை வெளியிடப் போவதாக மிரட்டி வருகிறார் என, புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னை செஷன்ஸ் கோர்ட்டில், பைசூல் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு, மூன்றாவது முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, நடிகை ராதா கூறியதாவது: என்னை மூளைச்சலவை செய்து, என் சினிமா வாழ்வை முடக்கியதுடன், என் எதிர்காலத்தையும் பைசூல் சீரழித்து விட்டார். என்னிடம், 50 லட்சத்தை ஏமாற்றி, தலைமறைவாக இருந்து, சட்டத்தை கேலிக்கூத்தாக்கி வருகிறார். அவர் என்னை வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால் சட்டத்தை, ஒரு போதும் ஏமாற்ற முடியாது. பைசூல் மனு, மூன்று முறை தள்ளுபடியான பிறகும், போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதற்கான காரணம், இதுவரை புரியவில்லை. இந்த விவகாரத்தில், போலீசார் உடனடியாக பைசூலை கைது செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.



0 comments to ""பைசூல் என்னை ஏமாற்றலாம்; சட்டத்தை ஏமாற்ற முடியாது : நடிகை ராதா காரசாரம்"