ஆதிபகவன் படத்தையடுத்து பூலோகம், நிமிர்ந்து நில் என்ற படங்களில நடித்து வருகிறார் ஜெயம்ரவி. இதில் பூலோகம் படத்தில் வடசென்னையில் வாழ்ந்த ஒரு பாக்சர் வேடத்தில் நடிக்கிறார். அதற்காக ஜிம் சென்று மாதக்கணக்கில் தனது உடம்பை வலுவாக்கி நடித்து வருகிறார்.
இதற்கிடையே, சமுத்திரகனி இயக்கும் நிமிர்ந்து நில் படத்தில் 48 வயது, 25 வயது என இரண்டுவிதமான வேடங்களில் நடிக்கிறார். அதனால் பாடிலாங்குவேஜை கேரக்டர்களுக்கேற்ப மாற்றி மாற்றி நடித்து வருகிறார். இதனால், இந்த படங்களுக்காக அவர் பல மாதங்களை அதிகப்படியான விரயம் செய்து நடித்து வருகிறார்.
ஆனபோதும், இரண்டு படங்களுக்குமே அடிக்கடி பைனான்ஸ் பிரச்னை ஏற்படுகிறதாம். அதனால்தான் அடிக்கடி படப்பிடிப்புகள் கேன்சல் செய்யப்பட்டு நிறைய இடைவெளி விழுந்து கொண்டிருக்கிறதாம். அதனால்தான், எப்போதோ முடிந்து திரைக்கு வரவேண்டிய இரண்டு படங்களுமே இவ்வளவு தாமதமாம்.
ஏற்கனவே ஆதிபகவன் படத்துக்காக இரண்டு ஆண்டுகளை விரயம் செய்த ஜெயம்ரவி இந்த படங்களிலும் இரண்டு ஆண்டுகளாக சிக்கிக்கொண்டதால், தற்போது தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் நடிக்கும் படத்திலிருந்து இனி தான் நடிக்கும் படங்களை வேகமாக முடித்து வெளியிடும் நிறுவனங்களாக பார்த்து நடிக்கப்போகிறாராம்.



0 comments to "பைனான்ஸ் பிரச்னையில் ஜெயம்ரவி படங்கள்!"