விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக சீன நிலவு ஆய்வு திட்ட செய்தி
சீனா நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய சாங்இ-3 என்ற விண்கலம் நேற்று முன்தினம் பாதுகாப்பாக நிலவில் இறங்கியது. அதன் பின்னர் விண்கலம் நிலவின் பரப்பில் இருந்து புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக சீன நிலவு ஆய்வு திட்ட செய்தி தொடர்பாளர் பெய் ஜாயோ தெரிவித்துள்ளார்.
சீனாவின் நிலவு திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மா ஜிங்ரூயி பெய்ஜிங் விண்வெளிதள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கூறுகையில், சாங்இ-3 நிலவு ஆய்வு திட்டம் வெற்றி அடைந்துள்ளது என்று கூறினார். அவரருகே, சீன அதிபர் ஜீ ஜிங்பிங் மற்றும் சீன பிரதமர் லி கெகியாங் ஆகியோரும் உடன் இருந்தனர்.
சீனாவின் விண்வெளி திட்டங்களில் சாங்இ-3 விண்கல திட்டம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று சீன கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழுவினர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளனர்.
நிலவின் புவியியல் அமைப்பு மற்றும் மேற்பரப்பில் உள்ள பொருட்கள் மற்றும் இயற்கை வளங்கள் ஆகியவற்றை 3 மாதங்கள் வரை யுடு விண்கலம் ஆய்வு செய்யும். இது மணிக்கு 200 மீட்டர் வேகத்தில் இயங்கும். இது நேற்று காலை 4.35 மணியளவில் சாங்இ-3 நிலவு ஆய்வு விண்கலத்தில் இருந்து பிரிந்து நிலவின் மேற்பரப்பை தொட்டது.



0 comments to "சீனாவின் நிலவு ஆய்வு திட்டம் முழுமையாக வெற்றி பெற்றதாக அறிவிப்பு"