Home » » இலங்கையில் பயனுள்ள புதிய சட்ட மூலம் அமுலாக்கம்

காணி உரிமை பெற்றோரைத் தொடர்ந்து மூத்த ஆண் பிள்ளைக்கு மட்டுமன்றி பெண் பிள்ளை உள்ளிட்ட அனைத்து பிள்ளைகளுக்கும் சமஉரிமை வழங்கப்படும் வகையில் காணி கட்டளை சட்டத்தில் மறுசீரமைப்பு செய்யப்படு மெனவும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் அமைச்சர் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். கணக்கெடுப்புகளின் படி காணியில்லாத சுமார் 2 இலட்சம் பேர் நாட்டில் உள்ளனர். தற்போது சராசரியாக 5 ஏக்கர் காணி வைத்திருக்கும் ஒருவர் சுமார் 20 வருடங்களின் பின்னர் 10 பேர்ச் வரையிலான காணியினையே கொண்டிருக்கக் கூடும்.

 எதிர்காலத்தில் இவ்வாறான பாரிய காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒரே காணியில் மாடி வீடு அமைத்து வதியும் அனைத்து குடும்பத்தினருக்கும் குறித்த காணிக்கான உரிமைகளை வழங்க தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

காணிப் பிரச்சினை காரணமாக ஏற்படும் குடும்ப தகராறுகளை தீர்க்கும் வகையில் இணக்க சபையொன்று உருவாக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த சட்ட மூலத்தினை மூத்த அரசியல் வாதிகள் சிலர் எதிர்த்துவருகிறது குறிப்பிடத்தக்கது.

0 comments to "இலங்கையில் பயனுள்ள புதிய சட்ட மூலம் அமுலாக்கம்"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer