மன்னார், தாழ்வுபாட்டு கிராமத்தில் சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 37 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் வத்தளை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே விசேட அதிரடிப் படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு கைப்பற்றப்பட்ட 37 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



0 comments to "ரூ. 50 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் கைது"