கொக்கட்டிச்சோலை, 40ஆம் வட்டை தாந்தாமலை எனும் பிரதேசத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் இன்று திங்கட்கிழமை நண்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் மாவடிமுன்மாரி பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய கேதாரபிள்ளை பேகேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலப் பகுதியில் இந்த இடத்தில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 comments to "கொக்கட்டிச் சோலை பகுதியில் யானைகளின் அத்துமீறல் ஒருவர் பலி "