மக்களை மீள் குடியேற்றம் செய்வது தொடர்பில் சிறிய பிரச்சினை காணப்படுவதாக மீளகுடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
30 வருடங்கள் இம்பெற்ற யுத்தத்தின் பின்னர் வெறும் நான்கு வருடங்களில் மீள் குடியேற்றத்தை முழுமையாக நிறைவு செய்துவிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இந்த வருட இறுதிக்குள் மீள்குடியேற்றங்களை நிறைவுருத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்;றும் போதே பிரதியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன் இவ்வாறு குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இலங்கையின் மீள் குடியேற்றம் தொடர்பில் இலங்கை வந்த ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.



0 comments to "மீள்குடியேற்றம் தொடர்பில் முரளிதரன்"