யாழ். போதனாவைத்தியசாலை தொண்டர்களின் பணிப்புறக்கணிப்பு மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
நிரந்தர நியமனம் கோரி சுமார் 200ற்கு மேற்பட்ட தொண்டர்கள் நேற்று முன்தினம் முதல் கொட்டும் மழையிலும் கொழுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் பணிப்பகிஸ்கரிப்பினை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கடந்த 4 வருடங்களாக யாழ். போதனா வைத்தியசாலையில் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் மற்றும் செஞ்சிலுவைத் தொண்டர்கள் பல்வேறு வளப்பற்றாக்குறையிலும் செவ்வனே பணியாற்றி வந்தனர்.
எனினும் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாக கூறப்பட்ட நிலையிலும் தற்போது புதிய தொண்டர்கள் க.பொ.த சாதாரண தர சித்தியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் உரிய அதிகாரிகள் தங்களுக்கும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்று கோரியும் தொடர் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



0 comments to "தீர்வு வழங்கப்படுமா? தொடரும் யாழ் வைத்தியசாலை ஊழியர்களின் போராட்டம் "