சிறப்பு அதிரடிப்படையைப் பலப்படுத்தும் வகையில், புதிய படையினர் சேர்க்கப்பட்டு விரைவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி எம்.சி.ரணவான தெரிவித்துள்ளார்.
கட்டுக்குருந்தவில் தற்போது நடைபெற்று வரும் பயிற்சிகள் முடிவுக்கு வந்த பின்னர், 300 பேருக்கான பயிற்சி ஆரம்பமாகும். அடுத்த ஆண்டில், சிறிப்பு அதிரடிப்படைக்கு 600 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறப்பு அதிரடிப்படையினர் எல்லா மாவட்டங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கோட்டைக்கு அருகிலுள்ள பண்ணைப் பகுதியில், ஒரு தொகுதி சிறப்பு அதிரடிப்படை கொமாண்டோக்கள் நிலை கொண்டுள்ளனர். தற்போது சிறப்பு அதிரடிப்படையில் 7800 அதிகாரிகளும் படையினரும் உள்ளனர். என்றாலும், 10 ஆயிரம் பேர் தேவைப்படுகின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



0 comments to "இலங்கையில் மீண்டும் போரா? ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கும் அரசாங்கம்."