வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவுத்திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. இன்று 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் வாக்கெடுப்பிற்கு விடுக்கப்பட்ட போது எதிராக கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐவரும் ஆதரவாக அதே கட்சியின் தற்போதைய தலைவர் உள்ளிட்ட இருவரும் வாக்களித்திருந்தனர்.
எதிர்கட்சியான ஈபிடிபியின் இரண்டு உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலைமை வகித்திருந்தனர். இன்று தோற்கடிக்கப்பட்டதனால் அடுத்து வரும் இருவாரங்களின் பின்னராக மீண்டுமொரு முறை வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
அவ்வாக்கெடுப்பிலும் தோல்வியுற்றால் தற்போதைய தலைவர் அனந்தராஜ் வகித்துவரும் பதவியினை இழக்கும் நிலை ஏற்படும். இதனிடையே வடக்கு மாகாணசபை பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு போதிய நிதி ஏற்பாடுகள் ஏதும் செய்யப்பட்டிருக்கவில்லை எனவும் இதனால் ஏதுமற்ற வரவு செலவுத்திட்டம் தொடர்பாக தாம் அக்கறை கொண்டிருக்கவில்லையென ஈபிடிபி உறுப்பினர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள வலி.கிழக்கு பிரதேச சபை, மானிப்பாய் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பிரதேச சபை ஆகியவற்றினது வரவு செலவுத்திட்டங்கள் கட்சி சார்ந்த உறுப்பினர்களினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



0 comments to "தமிழ் மக்களின் அபிலாசைகளில் அக்கறை உள்ளவர்கள் என்று கூறுவோரே மக்களுக்கு துரோகம் இழைகின்றனரா?"