Home » » டில்லியில் பனி - விமானங்கள் தரையிறங்க முடியவில்லை

கடும் பனி மூட்டம் காரணமாக, டில்லியில் போக்குவரத்து சிக்கலாகி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மார்கழி முதல் நாளில் பனியின் தாக்கம் கடுமையாக இருந்தது. தலைநகரான டில்லியில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத மத்தியில் இருந்து ஜனவரி இறுதி வரை பனி மூட்டம் ஏற்படுவது வழக்கம். இந்த காலக்கட்டத்தில், டில்லி நகரின் தரை மற்றும் வான்வழி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். அதிகாலை 3 மணியில் இருந்து 8 மணி வரை பனி மூட்டம் நிலவும். சில நாட்களில், காலை 10 மணி வரை பனி மூட்டம் தொடரும்.

டில்லியில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால், வாகனம், ரயில், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எதிர்வரும் வாகனங்கள் தெரியாத நிலையில், காலை 8 மணிவரை, அனைத்து வாகனங்களும் விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. பனி மூட்டம் காரணமாக சிக்னல் விளக்குகளின் வெளிச்சம் தெரியாத காரணத்தால், பல ரயில்களின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டன. சில ரயி்ல்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

விமான சேவை கடும் பாதிப்பு : டில்லி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள், பனிமூட்டம் காரணமாக ஓடுதளம் தெரியாத காரணத்தால், தரையிறங்க முடியாமல் தவித்தன. அதேபோல், விமான புறப்பாடுகளும் தாமதமாகின. பனிமூட்டம் காரணமாக, இன்று காலை டில்லியில் இருந்து புறப்பட வேண்டிய, வந்து சேர வேண்டிய 25 விமானங்கள் பாதிப்பிற்குள்ளாகின. இது போல் சர்வதேச விமானங்களும் தரை இறங்க முடியாமல் மாற்று இடங்களுக்கு திரும்பி சென்றன.

0 comments to "டில்லியில் பனி - விமானங்கள் தரையிறங்க முடியவில்லை"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer