2013ம் ஆண்டு சிம்புவுக்கு கடினமான ஆண்டாகவே அமைந்தது. அவர் நடித்த எந்தவொரு படமும் வெளியாகவில்லை. கடைசியாக 2012ம் ஆண்டு வெளிவந்தது போடா போடி. அதுவும் சரியாக போகவில்லை. என்ன காரணத்தாலோ சிம்பு நடித்த வாலு இதோ வருது அதோ வருதுன்னு கடைசிவரை ரிலீசாகவில்லை. தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்திக்கும், சிம்புவுக்கும் மோதல் என்றார்கள். இயக்குனருக்கும் சிம்புவுக்கும் மோதல் என்றார்கள். எது உண்மை என்று தெரியாது. ஆனால் தயாரிப்பாளரின் கோடிக் கணக்கான படம் முடங்கிக் கிடக்கிறது என்கிற உண்மை மட்டும் தெரிகிறது.
சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் காதல் அரும்பியது வாலு படப்பிடிப்பில்தான் என்கிறார்கள். அதே சூட்டோடு படம் வந்திருந்தால். படத்திற்கு ஒரு பெரிய பப்ளிசிட்டி கிடைக்கும். அதைக்கொண்டு கூட படம் நன்றாக ஓடுவதற்கு வாய்ப்பிருந்திருக்கிறது. அப்படி ஒரு வாய்ப்பைகூட தயாரிப்பாளருக்கு சிம்பு தர தயாராக இல்லை ஏன் என்று தெரியவில்லை
படங்கள் ரிலீசாகாவிட்டாலும சிம்பு தனது பப்ளிசிட்டி திறன் மூலம் தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக் கொண்டிருக்கிறார். வீட்டில் பெண் தேடுகிறார்கள், ஹன்சிகாவுடன் காதல், திடீரென்று ஆண்ட்ரியாவுடன் நெருக்கம், என அவ்வப்போது செய்திகளை அவரே கசியவிட்டு புத்திசாலித்தனமாக தன்னை பீல்டில் நிலைநிறுத்திக் கொள்கிறார்.
இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் சிம்புவுக்கு பட வாய்ப்புகள் அமைந்து விடுகிறது. வாலு படம் அப்படியே இருக்க தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பாண்டிராஜ் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். விடிவி கணேசின் இங்க என்ன சொல்லுது படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்போது கவுதம் மேனன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுதவிர செல்வராகவன் படம் உள்பட வேறு சில படங்களிலும் நடிக்க இருக்கிறார்.
2014ம் ஆண்டிலாவது சிம்பு தனது படங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் அவரது 4 படங்கள் ரிலீசாகும். அதை அவர் செய்வாரா. தொடர்ந்து செயற்கையான பரபரப்பு மூலமே தன்னை நிலை நிறுத்திக் கொள்வாரா என்பதை பொறுதிருந்துதான் பார்க்க வேண்டும்.



0 comments to "2014 சிம்பு ஆண்டாக அமையுமா ?"