வரவு செலவுத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இரகசியமாக வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை.
உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டத்தை போன்று நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்ட யோசனை குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படாது.
மாறாக ஆளும் கூட்டமைப்பிற்குள் எவரேனும் கேள்வி எழுப்பினால் இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியுமே தவிர ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று நடத்த முடியாது.
இதேவேளை, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றார்.



0 comments to "நாடாளுமன்றில் இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியாது; கெஹலிய"