Home » » போதைபொருள் வர்த்தகத்தை அரசு அரன்கேற்றுகின்றதா?

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 2013 ம் ஆண்டிலேயே கூடுதலான ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக சுமார் 350 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் இலங்கை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இலங்கைக்கு எந்த வழிகள் ஊடாக போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன என்று விசாரணை நடத்திவருகிறார். மேலும் அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், கடல் மார்க்கமாகவா அல்லது ஆகாயமார்க்கமாகவா போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுகின்றன என பல்வேறு கோணங்களில் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றது.

மேலும் அந்த கடத்தல் கும்பலை முறியடிக்கும் செயலில் நாங்கள் இறங்கியிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு இவ்வாறான கடத்தல்களில் பிரதமர் சம்பத்தப்பட்டதாக செய்திகள் வெளி வந்ததும் பிரதமரின் செயலாளர் ஒருவர் தனது பதவியை ராஜனாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது.

0 comments to "போதைபொருள் வர்த்தகத்தை அரசு அரன்கேற்றுகின்றதா?"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer