Home » » இலங்கையில் புரிந்துணர்வு ஏற்படுமா? சம்பந்தனின் சிறிய உதாரணம்


தென்னாபிரிக்காவின் மறைந்த, முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையிலிருந்து நாம் பல பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டியிருக்கின்றது. உண்மை,நீதி மற்றும் சமத்துவம் நிலைநாட்டப்படவேண்டும். இவையே புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான அடிப்படையான அத்திபாரமாகும் என்று தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவின் மறைந்த, முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா நினைத்திருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருந்திருக்கமுடியும். ஆனால், அவர் அவ்வாறு நினைக்கவில்லை. அவருடைய வாழ்க்கை,செயற்பாடுகள் எமக்கு ஒரு பாடமாக அமையும். இலங்கையை மாற்றியமைப்பதற்கும் உதவும் என்றும் அவர் சொன்னார்.

கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற தென்னாபிரிக்காவின் மறைந்த, முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் நினைவு பேருரையில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மறைந்த நெல்சன் மண்டேலாவை பொறுத்தவரையில்  அவர் ஒரு பயங்கரவாதியாகவே கருதப்பட்டார்.

அவரது வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. ஆனால், இன ஒதுக்கீட்டு கொள்ளையானது மனிதாபிமானமற்ற ஜனநாயக்கத்திற்கு மாறான மனித சமூதாயத்தினால் ஏற்றுக்கொள்ளப்படமுடியாததாகும் என்ற கொள்ளையில் அவர் உறுதியாக இருந்தார்.
வெள்ளை இராணுவத்தினர் அவரை கைது செய்வதற்கு வேட்டையாடிகொண்டிருந்தனர். தனது வாழ்க்கையை கூட அமைதியாக நடத்தமுடியாத நிலையில் அவர் ஓடி ஒழிந்து வாழ்ந்தார்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு 27 வருடங்களுக்கு பின்னர் அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

சிறையில் கூட அவர் வசதியாக இருக்கவில்லை. அவர் அடைக்கப்பட்டிருந்த அறையானது வசதியாக படுத்திருக்கமுடியாத அறையாக இருந்தது. அவ்விதமான ஒரு சூழலில் தான் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.

வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்தது. வெள்ளை ஆதிகத்திற்கு மாறாக கருப்பு ஆதிக்கத்திற்று மாறாக நான் போராடியிருக்கின்றேன.; ஜனநாயக சுதந்திரமான சமுகத்தை மதிக்கின்றேன். சம உரித்துடைமையுடன் நல்லிணக்கமாக வாழ விரும்புகின்றன். அந்த கொள்கைக்காக உயிர் தியாகம் செய்தவதற்கும் தயார் என்று நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

வழக்கு நிறைவடைந்ததன் பின்னர் அவர் குற்றவாளியாக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவர் மறியலுக்கு போனபோது துடிப்பமிக்க உணர்ச்சிமிக்க ஒருவராகவே அவர் தனது  44 வயதில் மறியலுக்கு சென்றார்.

வெளியில் அவர் வந்தபோது வேறுவிதமான மனிதராக காணப்பட்டார். முற்றாக மாறியிருந்தார். இந்த மாற்றத்திற்கு காரணமென பலர் கேட்டனர். மறியலில் இருந்தபோது ஆழ்ந்த சிந்தனை பரிட்சையில் ஈடுபட்டமையால் முதிர்ச்சியடைந்திருக்கின்றேன் என்றார்.

அவர் சிறையிலிருந்து வெளியேறிய போது, வெள்ளையர்களின் ஆட்சியில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இன ஒதுக்கீட்டு கொள்கையை மாற்றியமைப்பது.உண்மையான ஜனநாயகத்தை கொண்டுவருவது ஒரு இலவான விடமாக இருக்கவில்லை.அரசியல் சாசனத்தில் தேவையான விடயங்களை கொண்டுவருவது இலகுவான விடயமாக இருக்கவில்லை.

வெள்ளை மற்றும் கறுப்பு இன மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இலகுவான விடயமாக இருக்கவில்லை. இந்த சூழலில் நேர்மையான செயற்படவேண்டியது கட்டாயமாக இருந்தது. அதனை மண்டேலா செய்தார். ஒரு விசுவாசமான நடத்தைக்காக பாரிய பங்கீடுகளை செய்தார்.

உண்மையான நல்லிணக்கம், புரிந்துணர்வு மக்கள் மத்தியில் ஏற்படவேண்டுமாக இருந்தால் உண்மை அறியப்படவேண்டும் அவற்றை காணாமல் புரிந்துணர்வை ஏற்படுத்தமுடியாது. நடந்து முடிந்தவை, நடந்துகொண்டிருப்பவை மற்றும் நடக்ககூடியவை ஆகியவற்றின் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறான நிலை ஏற்பட்டால் மட்டுமே எல்லோரும் உள்வாங்ககூடிய ஒற்றுமையை ஏற்படுத்தமுடியும். அதன் ஊடாகவே நிரந்தரமாகவும் விசுவாசமாகவும் இருக்கமுடியும் உண்மையை மறைப்பதற்கு அவர் சம்மதிக்கவில்லை.

வெள்ளை இன ஆட்சியிருந்த போது ஜனாதிபதியாக இருந்த வெள்ளையின ஜனாதிபதி, நெல்சன் மண்டேலா ஜனாதிபதியான போது உப-ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

மறைந்த நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையிலிருந்து நாம் பல விடயங்களை கற்றுகொள்ளவேண்டியிருக்கின்றது. உண்மை, நீதி மற்றும் சமத்துவம் நிலைநாட்டப்படவேண்டும். இவையே புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு அடிப்படையான அத்திபாரமாகும் என்றார்.

0 comments to "இலங்கையில் புரிந்துணர்வு ஏற்படுமா? சம்பந்தனின் சிறிய உதாரணம் "

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer