Home » » வரவு செலவு திட்டம் தோல்வியடைந்த உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் நிறைவேற்று குழு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அதிகாரத்தில் உள்ள, இரண்டாவது முறையாகவும் வரவு செலவு திட்டம் தோல்வியடைந்த  உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், இன்றைய தினம் இடம்பெறும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்று குழு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று இடம்பெறும் நிறைவேற்று குழு கூட்டத்தில் இவர்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஒரு முறை வரவு செலவு திட்டம் தோல்வியடைந்த உள்ளுராட்சி மன்றத்தின் பிரதிநிதிகளுக்கு விசேட அறிவுரைகள் நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் நேற்று மாலை நாடாளுமன்றில் கட்டட தொகுதியில் இடம்பெற்ற சந்திப்பின் போது, இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடலின் போது வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் பிரசக்கமாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments to "வரவு செலவு திட்டம் தோல்வியடைந்த உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் நிறைவேற்று குழு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்."

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer