Home » » யாழில் அரை கம்பத்தில் பறக்கும் இலங்கைத் தேசியக்கொடி

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி இன்றும் நாளையும் துக்க தினமாக அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இந்த இரண்டு நாட்களிலும் நாட்டின் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இன்று யாழிலும் சில இடங்களில் அரைக்கம்பத்தில் கொடிகள் பறந்தன.

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகிய இடங்களில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தன.

இதேவேளை மறைந்த நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 15 ம் திகதி நடைபெறவுள்ளது.

0 comments to "யாழில் அரை கம்பத்தில் பறக்கும் இலங்கைத் தேசியக்கொடி "

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer