Home » » ஒருங்கிசைந்த ஆய்வுக்கான தமிழ் நடுவத்தின் “இனப்படுகொலை தமிழீழமும் இந்தியாவின் பாதுகாப்பும்“ நூல் வெளியீடு!

ஒருங்கிசைந்த ஆய்வுக்கான தமிழ் நடுவத்தின் “இனப்படுகொலை தமிழீழமும் இந்தியாவின் பாதுகாப்பும்“ என்ற நூல் வெளியீடு தமிழ்நாட்டில் பாரி முனையில் உள்ள YMCA அரங்கத்தில் நாளை வியாழக்கிழமை மாலை 04.30 மணிக்கு மூத்த வழக்கறிஞர் திரு. நா.சந்திரசேகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
ஈழத்தமிழர் தமது அரசியல் விடுதலைப் போராட்டத்தில் கடந்தகால அனுபவங்களை படிப்பினையாகக்கொண்டு தற்கால உலக ஒழுங்கினை உள்வாங்கி அதற்கமைய வியூகங்களை அமைத்து பயணிப்பதன் மூலம் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்பதனை விளக்கும் இந்நூல் தமிழ்நாட்டின் அரசியல் சார்புநிலை கடந்து பொதுப்பரப்பில் வெளியிடப்படுவதும், வலுவான கருத்துருவாக்க சக்திகளான வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் பங்களிப்பில் வெளிவருவதும் சிறப்பம்சமாகும்.
எனவே இந்நூல் பலத்த எதிபார்ப்புடன் இலக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கலாம்.

0 comments to "ஒருங்கிசைந்த ஆய்வுக்கான தமிழ் நடுவத்தின் “இனப்படுகொலை தமிழீழமும் இந்தியாவின் பாதுகாப்பும்“ நூல் வெளியீடு!"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer